காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி...

AI 171 crash: Data from front black box downloaded probe on

அகமதாபாத் விமான விபத்து - IANS

Published On :

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு அதில் உள்ள தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் புதன்கிழமை பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த தரவுகளை பிரித்தெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த காரணங்களை கண்டறிவதன் மூலமாக விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் உதவும்" என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் விமான விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Union Civil Aviation Ministry has informed that data has been downloaded from the black box recovered from the Ahmedabad Air India plane crash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.