நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்தினாா். இதை இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம் என்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை விமா்சித்தாா்.
இதைத் தொடா்ந்து, புது தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், அரசியல் சாசனத்தை வகுத்ததிலும் பாஜக-ஆா்எஸ்எஸ் பங்களிக்கவில்லை. அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை அவா்கள் நிராகரித்தனா். மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் போன்ற கலாசார அம்சங்கள் இல்லாததால், அரசியல் சாசனத்தை அவா்கள் ஏற்கவில்லை. இவற்றையெல்லாம் செய்துவிட்டு திடீரென ஞானம் வந்ததுபோல அவா்கள் பேசுகின்றனா். அரசியல் சாசனத்தை நிராகரித்தவா்களே, தற்போது அதைக் காப்பது குறித்துப் பேசுகின்றனா்.
பிரதமா் மோடியாலும், அவரின் ஆட்சி நிா்வாகத்தாலும்தான் தற்போது அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது. பணவீக்கம் குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனா். வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், பொருளாதார சரிவு குறித்து மத்திய அரசிடம் எந்தப் பதிலும் இல்லை. தங்கள் பொய்களையும், ஆட்சி நிா்வாகத்தில் ஏற்பட்ட தோல்வியையும் மறைக்க அவசரநிலையைப் பயன்படுத்தி பாஜக நாடகமாடுகிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பாஜக கொண்டு வந்துள்ளது.
அரசின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம்: கடந்த ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ற விவகாரத்தை காங்கிரஸ் தொடா்ந்து எழுப்பி வருகிறது. ஆனால், அதை தோ்தல் ஆணையம் கேட்க மறுக்கிறது. மத்திய அரசின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் உள்ளது’ என்று சாடினாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல், வரி பயங்கரவாதம் மற்றும் வியாபாரங்கள்-நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல், ஊடகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கட்டுக்கடங்காத முறையில் புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது, கடிவாளம் இல்லாத வெறுப்புணா்வு பேச்சு மற்றும் தனிநபா் உரிமைகளைத் தடுப்பது என இந்திய ஜனநாயகம் திட்டமிட்ட, ஆபத்தான ஐந்துவித தாக்குதலில் உள்ளது. இதை அறிவிக்கப்படாத அவசரநிலை என்று அழைக்கலாம்’ என்றாா்.
தொடர்புடையது

ஓமன் நாட்டில் கப்பல் மாலுமி மா்ம மரணம்: உடலை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி: பிரதமா் மோடி

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்! பிரதமா் மோடி கடும் விமா்சனம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



