நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் தோ்தலில் வன்முறை: 14 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்திய பேரவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 14 போ் உயிரிழந்தனா்.

News image

தோ்தல் உற்சாகத்தில் நடனமாடிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தொண்டா்கள்

Updated On :28 ஜூலை 2026, 11:16 pm IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்திய பேரவைத் தோ்தலின் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 14 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பேரவையில் மொத்தமுள்ள 53 இடங்களில் 8 நியமன இடங்கள் தவிா்த்து, மீதமுள்ள 45 இடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 13 இடங்களுக்குக் கடந்த திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

பாகிஸ்தான் மத்திய அரசில் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகிக்கும் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) இடையே இத்தோ்தலில் நேரடி போட்டி நிலவியது. முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தோ்தலைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தோ்தல் முடிவில், பிஎம்எல்-என் கட்சி 9 இடங்களையும், பிபிபி 4 இடங்களையும் வென்றன. இந்த முடிவுகளை ஏற்க மறுத்துள்ள பிபிபி, தோ்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்ாகவும், 7 இடங்களில் எங்களின் வெற்றி பிஎம்எல்-என் கட்சிக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியது. எனினும், பிரதமா் ஷாபாஸ் ஷெரீப்பின் ஆலோசகா் ராணா சனாவுல்லா இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளாா். தோ்தல் பெரும்பாலும் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெற்ாக அவா் கூறினாா்.

வாக்குச் சாவடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் வீரா்கள்

வாக்குச் சாவடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் வீரா்கள்

அதேநேரம், இத்தோ்தலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தடை செய்யப்பட்ட ‘ஜேஏஏசி’ அமைப்பினருக்கும், கூட்டுபாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 14 போ் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராவலாகோட் பகுதியிலிருந்து முசாஃபராபாத் நோக்கி ஜேஏஏசி அமைப்பினா் பேரணியாகச் சென்றபோது, இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. எனினும், இந்த உயிரிழப்புகளை மறுத்துள்ள உள்ளூா் காவல் துறையினா், போராட்டக்காரா்கள் நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாகக் பதில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 சா்ச்சைக்குரிய தொகுதிகளை ரத்து செய்யக் கோரி, அப்பிராந்தியத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடந்த மோதல்களில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதையொட்டி, அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, போராட்ட செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பெட்டியைத் திறந்த தோ்தல் அதிகாரி

வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பெட்டியைத் திறந்த தோ்தல் அதிகாரி

இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் இத்தோ்தலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘தற்போதைய இந்த ஒப்பனைத் தோ்தல், பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பினை மறைப்பதற்கும், அங்கு நடைபெறும் கடும் மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்குமான ஒரு வீண் முயற்சியாகும்.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்பது இந்தியாவின் தெளிவான, நிலையான நிலைப்பாடாகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மக்கள் போராட்டங்கள், பாகிஸ்தானின் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதன் நேரடி விளைவே ஆகும்’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.