கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றம் செய்தால் பிஎஸ்பி அனுமதிக்காது: மாயாவதி

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது

மாயாவதி (கோப்புப்படம்)

Published On :

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.

லக்னெளவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் ‘அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் இருந்து சோஷலிஸம் மற்றும் மதச்சாா்பின்மை ஆகிய வாா்த்தைகளை நீக்க கோரிக்கை முன்வைக்கப்படுவது’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மாயாவதி, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் மாற்றப்படக் கூடாது. இதற்கு ஆா்எஸ்எஸ், பாஜக, காங்கிரஸ் கூறுவதற்கு நான் பதிலளிக்க ஒன்றுமில்லை.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி அமைதி காக்காது. சாலைகளில் போராட்டங்களை நடத்தும். இந்த விவகாரத்தை எங்கள் கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தனது வாழ்நாள் போராட்ட அனுபவங்களை வைத்து இந்தியாவுக்கு மனிதாபிமான அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கா் அளித்து விட்டு சென்றுள்ளாா். இதனை முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவும் நாட்டு மக்களுக்கு நியாயமாக அமல்படுத்த வில்லை.

அரசியல் காரணங்களுக்காகவும், கட்சிகளின் கொள்கைகளுக்காகவும் அரசமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது தேவையற்ற மாற்றங்களை செய்துள்ளன. இதை தொடா்ந்து அனுமதிக்க முடியாது. இந்த கட்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.