தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு குட் நியூஸ்!

கடன் வாங்காமல் பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு..

News image

க்விட்

Updated On :9 ஜூலை 2026, 4:56 pm IST

கடன் வாங்காமல் பட்ஜெட் விலையில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே ரெனால்ட் நிறுவனம் பல்வேறு மாற்றங்களுடன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மலிவு விலை ஹேட்ச்பேக் கார்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது ரெனால்ட் க்விட். 2026-ம் ஆண்டுக்கான புதிய பதிப்பான இந்த காரின் ஆரம்ப ஹோரூம் விலை ரூ. 4.53 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய க்விட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றாலும், தோற்றம், வசதிகள், வேரியண்ட் அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன மாற்றங்கள்?

புதிய க்விட்டில் பார்த்தவுடன் பெரிய வித்தியாசம் தெரியாது. கூர்ந்து கவனித்தால் சில மாற்றங்கள் தென்படும். புதிய 3டி ரெனால்ட் லோகோ, சக்கரங்களுக்கு புதிய இரட்டை நிற வீல் கவர்கள், பின்புற க்விட் எழுத்துகளின் வடிவமைப்பும், வெள்ளி நிற பினிஷும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர ஹெட்லேம்ப், பகல் நேர எல்இடி, பம்பர்கள், டெயில் லேம்புகள் உள்ளிட்ட மற்ற அனைத்து வடிவமைப்பும் பழைய மாடலைப் போலவே தொடர்கிறது.

உட்புறத்தில் புதிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்போடெயின்மெண்ட் திரையை இயக்கும் கட்டுப்பாடுகளும் ஸ்டீயரிங்கிலேயே கிடைக்கின்றன. மற்றபடி 8 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் விண்டோ, மேனுவல் ஏசி போன்றவை பழைய மாடலைப் போலவே தொடர்கின்றன.

கூடுதல் பாதுகாப்பாக 6 ஏர்பேக்குகள், ரிவிவ் கேமரா, ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

photo courtesy - https://www.team-bhp.com/

New suspected cases of Ebola have been reported in parts of Congo that were previously unaffected, the government said, as the death toll in the country's latest Ebola outbreak reached 600.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.