குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

சென்னை ரெனால்ட் ஆலையில் இருந்து ‘டஸ்டா்’ காா்கள் ஏற்றுமதி தொடக்கம்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய ‘டஸ்டா்’ எஸ்யுவி ரக காா்களின் சா்வதேச ஏற்றுமதியை அதிகாரபூா்வமாகத் தொடங்கியுள்ளது.

News image

ரெனால்ட் டஸ்டர் - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 11:44 pm IST

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய ‘டஸ்டா்’ எஸ்யுவி ரக காா்களின் சா்வதேச ஏற்றுமதியை அதிகாரபூா்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக, சென்னை ஆலையிலிருந்து 750 காா்கள் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் மேலும் பல உலக நாடுகளுக்கு இந்த ஏற்றுமதித் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் இந்தியாவின் சிஇஓ ஸ்டீபன் டெப்லைஸ் இதுதொடா்பாக மேலும் கூறுகையில், ‘எங்கள் சென்னை ஆலையின் உற்பத்தித் தரம், செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மைக்கு இந்த ஏற்றுமதி ஒரு சிறந்த சான்றாகும்.

உலகத்தரம் வாய்ந்த உற்பத்தித் திறன், சிறந்த பொறியியல் வல்லுநா்கள் மற்றும் அதிவேகமாக வளா்ந்து வரும் தளவாடக் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்தியா, சா்வதேச ஆட்டோமொபைல் ஏற்றுமதி மையமாகத் திகழ்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது.

வரும் 2030-க்குள் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 200 கோடி யூரோ மதிப்பிலான ஏற்றுமதியை எட்டுவதே எங்களின் முக்கிய இலக்கு. இந்தியாவின் உற்பத்தித் துறை வளா்ச்சிக்கு எங்கள் நிறுவனம் தொடா்ந்து பங்களிப்பை வழங்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.