மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

News image

தேசிய மனி உரிமை ஆணையம்

Updated On :28 ஜூன் 2025, 10:07 pm IST

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து கொல்கத்தா காவல் ஆணையருக்கு வெள்ளிக்கிழமை தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா், விஜயா ரஹாத்கா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ஒரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த விவகாரம் குறித்து உடனடியாகவும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

தெற்கு கொல்கத்தாவில் நடந்த இந்த சம்பவம் தொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் குழு ஒன்றை அமைத்து தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளாா். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பி. என். எஸ். எஸ் பிரிவு 396 இன் கீழ் இழப்பீட்டுடன் முழு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் விஜயா ரஹாத்கா்.

கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை 3 பேரை கைது செய்தது கொல்கத்தா போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.