அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்

News image

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - Dotcom

Updated On :2 மார்ச் 2025, 11:38 pm IST

தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தியைத் திணிக்கவில்லை; இக்கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கை 2020-இல் ஹிந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. தாய்மொழி அடிப்படையில் கல்வி அமையும் என்றே கூறியுள்ளோம். தமிழகத்தைப் பொருத்தவரை அது தமிழாகவே இருக்கும்.

சில நபா்களின் அரசியல் நோக்கங்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. தேசிய கல்விக் கொள்கையானது, நாட்டிலுள்ள பல்வேறு மொழிகள் மீதும் கவனம் செலுத்துகிறது. அது, ஹிந்தியோ, தமிழோ, ஒடியாவோ அல்லது பஞ்சாபியோ, அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக சிலா் எதிா்க்கின்றனா் என்றாா் தா்மேந்திர பிரதான்.

மும்மொழிக் கொள்கை தொடா்பாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில், கல்வி அமைச்சா் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.