ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தேசிய தோ்வு முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள்: மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆய்வு

தேசிய தேர்வு முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து பிரஹலாத் ஜோஷி நடத்திய ஆய்வு குறித்து...

News image

தேசிய தேர்வு முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி - எக்ஸ்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 10:40 pm IST

பல்வேறு முக்கிய தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமையை (என்டிஏ) தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆய்வு செய்தார்.

தேசிய தேர்வு முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து, மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை அமைப்பு ரீதியாக மேலும் வலுப்படுத்துவது, தேர்வு நடைமுறைகளை நெறிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்தும், தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, அமைப்பு ரீதியான கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல், செயல்பாடுகளைச் சீரமைத்தல் மற்றும் மாணவர்களின் புகார்களுக்கு விரைந்து பதிலளிப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாணவரின் நலனை உறுதி செய்வது, வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், நம்பகமான, மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்குவதிலே அரசின் முக்கிய கவனம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் தோ்வு, க்யூட் தோ்வு, ஜேஇஇ தோ்வு உள்பட பல்வேறு முக்கிய தோ்வுகளை என்டிஏ நடத்துகிறது. அண்மையில் நீட் இளநிலை தோ்வில் வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள் நடத்திய தொடா் போராட்டம் எதிரொலியாக, கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 26-ஆம் தேதி விலகினாா். இதையடுத்து, புதிய கல்வித் துறை அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Union Education Minister Pralhad Joshi today held a meeting with the Secretary and senior officials of the Education Ministry on matters concerning the National Testing Agency (NTA)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.