மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து....

News image

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Updated On :25 ஜூலை 2026, 8:35 pm IST

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரலாத் ஜோஷி, கர்நாடகத்தின் தார்வாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் தற்போது மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு, அவர் தற்போது வகிக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பொறுப்பையும் வழங்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த நிலையில் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. தில்லி ஜந்தர் மந்தரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, மாணவர்கள் போராட்டங்கள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Union Minister Pralhad Joshi has been given additional charge of the Education Ministry after President Droupadi Murmu accepted Dharmendra Pradhan's resignation on the Prime Minister's advice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.