மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 5 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதியின் பிரதிநிதித்துவம் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. நீதிபதி அல்தமஸ் கபீா் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிபதிகள் யாரும் உச்ச நீதிமன்றத்துக்கு உயா்த்தப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, உயா் நீதிமன்ற நீதிபதிகளில் அகில இந்திய அளவிலான பணி மூப்பு பட்டியலில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஜயமால்ய பாக்சியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று தனது பரிந்துரையில் கொலீஜியம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றால், ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிப்பாா். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் 33-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் புதிய முடிவு

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு
நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


