
சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு ஜார்க்கண்டில் பயணிகள் ரயில் பெண் பணியாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கும விதமாக ராஞ்சி-டோரி பயணிகள் ரயிலை பெண் பணியாளர்கள் மட்டுமே இயக்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லோகோ-பைலட், உதவி லோகோ-பைலட், ரயில் மேலாளர், 3 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் 4 ரயில்வே காவலர்கள் என குழுவில் அனைவரும் பெண்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
தென்கிழக்கு ரயில்வேயின் ராஞ்சி பிரிவு இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பெண்கள் எந்த வேலையும் செய்ய வல்லவர்கள், அவர்களுக்கு வாய்ப்புகள் மட்டுமே தேவை.
விமான நிறுவனங்கள், விளையாட்டு அல்லது ரயில்வே என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர் என்று ரயில் மேலாளர் அனுபமா லக்ரா கூறினார்.
ரயில்வே பிரிவு பெண்கள் அதிகாரமளிப்பதில் உறுதியாக இருப்பதாக தென்கிழக்கு ரயில்வேயின் அதிகாரி நிஷாந்த் குமார் கூறினார்.
பெண்கள் மட்டுமே இயக்கிய இந்த ரயில் காலை 9 மணிக்கு ராஞ்சி நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் டோரியை அடைந்தது. அதில் மொத்தம் 14 நிறுத்தங்கள் இருந்தன.
மூத்த டிக்கெட் பரிசோதகர் ஜோதி குஜூர் கூறுகையில், "மகளிர் நாளை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதெல்லாம் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
மேலும் அவர்களின் வலிமை எல்லா இடங்களிலும் தெளிவாகத் தெரிகிறது." இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.