
கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கஞ்சா வைத்திருந்ததாக மலையாள திரைப்படத் துறையில் ஆர் ஜி வயநாட்டன் என்று அழைக்கப்படும் பிரபல ஒப்பனை கலைஞர் ரெஞ்சித் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
கலால் அதிகாரிகளின் கூற்றுப்படி, நாற்பத்தைந்து கிராம் உயர்தர கஞ்சா அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.
கொச்சியில் உள்ள கலாமசேரியில் வசிக்கும் ரெஞ்சித், 'ஆவேஷம்,' 'பைங்கிலி,' 'சூக்ஷமதர்ஷினி', 'ரோமஞ்சம்,' மற்றும் 'ஜான்.இ.மேன்' உள்ளிட்ட பல மலையாள படங்களில் ஒப்பனை கலைஞராக பணியாற்றியுள்ளார் என்று கலால் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் துறையின் 'ஆபரேஷன் கிளீன் ஸ்டேட்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.