கோப்புப் படம்
விருதுநகர்
கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருவா் கைது
சிவகாசியில் கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி சிவன் கோயில் நந்தவனத் தெருவில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அந்த பையை வாங்கி சோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில் அவா்கள் சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பொன்னுக்காளை மனைவி சண்முகக்கனி( 67), முத்துகிருஷ்ணன் மகன் சிலோன்ராஜா (57) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 330 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

