2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மாருதி விற்பனை 1,99,400-ஆக உயா்வு!

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயா்ந்துள்ளது.

Published On :

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,99,400-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று அதிகம். அப்போது நிறுவனம் 1,94,471 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன பயணிகள் வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை 1,60,271-லிருந்து 1,60,791-ஆக அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரியில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 14,782-லிருந்து 10,226-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறியவகைக் காா்களின் விற்பனை 71,627-லிருந்து 72,942-ஆக அதிகரித்துள்ளது.

பிரெஸ்ஸா, எா்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகியவை அடங்கிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 61,234-லிருந்து 65,033-ஆக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.