ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!

ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள பயங்கரவாதிகள் குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் கடந்தாண்டு 91 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் இருந்ததாகத் தரவுகள் தெரிவித்தன. அதனுடன் ஒப்பிடுகயில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை குறைந்து 76 தீவிரவாதிகள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், 17 பேர் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களில் 3 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 21 பேர் ஜெய்ஸ்-இ-முகமது, 35 பேர் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு செயல்பாட்டில் இருந்த 91 பயங்கரவாதிகளில் 61 பேர் வெளிநாட்டவர்கள்.

இந்தத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு 135 பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் இருந்தனர். அந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 48.35 % குறைந்தது. தற்போது அது மேலும் குறைந்துள்ளது.

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டதே காரணமாகும். மேலும், செயல்பாட்டில் உள்ளவர்களைக் கண்காணித்து பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புலனாய்வு துறை அமைப்புகள் இங்குள்ள பகுதிகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் 2001-ல் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016-ல் ஊரி தாக்குதல், 2019-ல் புல்வாமா குண்டுவெடிப்பு உள்ளிட்ட பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்புகள் எல்லைக்கு அப்பால் உள்ள ஆதரவுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு தொடர்ந்து உள்ளூர் ஆள்களை தங்கள் அமைப்பில் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

சமீப காலங்களில், காஷ்மீரில் உள்நாட்டு பயங்கரவாதிகளின் எழுச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரிதும் பங்களித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக அமைப்புகளின் ஆட்சேர்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 72 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 22 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2022 ஆம் ஆண்டில் 130 உள்நாடு பயங்கரவாதிகள் உள்பட மொத்தம் 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com