ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சம்பல் மசூதி

Updated On :

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மார்ச் 12 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியின் வெள்ளையடிக்கும் பணியை ஒரு வாரத்திற்குள் முடித்து முடிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை குழு மசூதியில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில் சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியின் வெளிப்புற சுவரின் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது என்று சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷகீல் பிடிஐயிடம் தெரிவித்தார்.

சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.

அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இதையடுத்து, சம்பல் வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, ரமலான் மாதத்தை முன்னிட்டு மசூதியை சுத்தம் செய்யவும் வெள்ளையடிக்கவும் மசூதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.