மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா

இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்..
அமித் ஷா
அமித் ஷா
Published on
Updated on
1 min read

இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அமித் ஷா, 370-வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் கனவை நரேந்திர மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கு அடிப்படையாக 370வது பிரிவு இருந்தது. ஆனால் அரசியலைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் அதைத் தற்காலிகமாக்கியதோடு, அதை ரத்து செய்வதற்கான வழியும் அந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு வங்கி அரசியல் மற்றும் பிடிவாதத்தால் பிரிவு 370 தொடர்ந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

நாட்டில் இரண்டு தலைவர்கள், இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு கொடிகள் இருக்க முடியாது என்பது நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவு.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 92 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இவற்றைச் சமாளிக்க எந்த அமைப்பும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை, ஆனால் மோடி அரசு அதைச் செய்தது. மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.

பயங்கரவாத சம்பவங்களில் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்வதில்லை.

மோடி ஆட்சியால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் ஏற்படும் இறப்புகள் 70 சதவீதம் குறைந்துள்ளன. பயங்கரவாத சம்பவங்களும் கடுமையாகக் குறைந்துள்ளன.

நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 2019-24 வரை சுமார் 40,000 அரசு வேலைகள் வழங்கப்பட்டன. 1.51 லட்சம் சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, திறன் மேம்பாட்டுக் கழகங்கள் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com