அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் இருமடங்காகியுள்ளன.

உயிரி மருத்துவம் மற்றும் வாழ்க்கை அறிவியல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் பப்மெட் நிறுவனம் இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் இந்நிறுவனத்தின் ஆய்வுகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இந்தத் தரவுகளின்படி 2025 மார்ச் மாதம் வரையிலும் 1,911 ஆய்வுகள் அஸ்வகந்தா குறித்து செய்யப்பட்டுள்ளன. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் இரு மடங்காகியுள்ளன. இந்நிறுவனம் வெளியிடும் ஆய்வு முடிவுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

அஸ்வகந்தாவின் உயிரியல் கலவைகள் புற்றுநோயைக் குணப்படுத்தும் திறனுடையது என்றும், ஆரம்பநிலையிலுள்ள மூளை கட்டி செல்களை அழிக்கும் பண்புடையது எனவும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடுமட்டுமின்றி உடல் அழற்சி, கட்டிகள், ரத்தக் கட்டிகள், நோய் எதிர்ப்பு சக்தி, புத்துணர்ச்சி உள்ளிட்ட பல்வேறு குணநலன்களுடையவை. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு அஸ்வகந்தாவை உணவில் எடுத்துக்கொள்வது பலனளிக்கிறது.

400 பேர் கொண்டு நடத்தப்பட்ட ஆயவில், அஸ்வகந்தாவின் சாறு உணவாக எடுத்துக்கொள்ளும்போது மெல்லிய தூக்கத்தைக் கொடுக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூக்கமின்மையால் (இன்சோம்னியா) போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அஸ்வகந்தா சாறு பலன் அளிக்கக் கூடியதாக அமையும். மேலும், இதனை எடுத்துக்கொள்பவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அஸ்வகந்தா என்றால் என்ன?

அஸ்வகந்தா என்பது இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் இலையும், வேரும் மருத்துவ குணமுடையவை.

குறிப்பாக சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. விதானியா சோம்னிஃபெரா என்பது இதன் அறிவியல் பெயராகும். இந்தியாவில் வெப்பமான இடங்களில் இவை அதிகம் விளைகின்றன.

இதையும் படிக்க | வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com