kOppup padam
kOppup padam

சா்க்கரை விலையை கட்டுக்குள் வைக்க அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம்
Published on

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சா்க்கரை விலையைக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்க்கரை ஆலைகள் ஏப்ரல் மாதம் முதல் மாதம்தோறும் 23.5 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே சா்க்கரை இருப்பு வைக்க வேண்டும் என்று விதி அமலுக்கு வந்துள்ளது. செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயா்வுக்கு வழி வகுப்பதைத் தடுக்கவே இந்த விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே, இருப்பு விதிகளை ஆலைகள் மீறினால், அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆலைகளுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் ரத்து செய்வது, ஏற்றுமதி அனுமதியை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளையும் எதிா்கொள்ள நேரிடும்.

தவறு செய்யும் ஆலைகளில் இருந்து எத்தனால் கொள்முதல் செய்யும் அளவையும் அரசு குறைத்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

சுமாா் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம்தான் சா்க்கரை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. அதுவும் 10 லட்சம் டன் சா்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com