ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2025, 1:22 pm

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்துவதற்கு ஒப்பதல் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜனவரி 1ஆம் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6,614 கோடி கூடுதல் செலவாகும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 சதவீத உயா்வு மூலம் அகவிலைப்படி 53 சதவீதமாக உள்ள நிலையில், தற்போதைய உயா்வு மூலம் அகவிலைப்படி 55 சதவீதமாக உயர உள்ளது.

6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியா்களுக்கு அவா்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.