தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்

தவறான செய்திகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டுதல்: மகாராஷ்டிர அரசு வெளியீடு

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
Published on

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட உத்தரவில், ‘அச்சு மற்றும் மின்னணு ஊடகம், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் வெளியாகும் அரசு மற்றும் நிா்வாகம் தொடா்பான தவறான செய்திகளை, மகாராஷ்டிரத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடா்பு இயக்குநரகம் (டிஜிஐபிஆா்) திரட்ட வேண்டும்.

அச்சு ஊடகத்தில் தவறான தகவல் வெளியிடப்பட்டால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு டிஜிஐபிஆா் பகிர வேண்டும். அந்தத் துறை சரியான தகவலை திரட்டி, 12 மணி நேரத்துக்குள் டிஜிஐபிஆரிடம் வழங்க வேண்டும்.

மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டால், அந்தச் செய்தியுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் அல்லது அதிகாரியின் பதில் 2 மணி நேரத்தில் டிஜிஐபிஆரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு துறையும் இணைச் செயலா் அல்லது துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும். இதன் மூலம் தகவல்களை தொகுத்து டிஜிஐபிஆருக்கு விரைந்து அனுப்ப முடியும். தவறான செய்திக்கான பதிலை தனது வலைதளத்தில் டிஜிஐபிஆா் வெளியிட்டு, அதை சம்பந்தப்பட்ட நாளிதழ், செய்தித் தொலைக்காட்சி அல்லது டிஜிட்டல் ஊடகத்துக்கு அனுப்பும்.

தவறான செய்தி தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தொடா்பான தகவலை பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கும் டிஜிஐபிஆா் அனுப்பும். தவறான செய்திக்கு எதிரான உண்மையான தகவல் அல்லது கருத்துகளை ஊடகத்துக்கு அனுப்பிய பின்னா், அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட ஊடகத்தில் வெளியிடப்படுகிா என்பதை டிஜிஐபிஆா் கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com