இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திமுகவின் தவறான நிா்வாகம் -நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்! திருச்சி வருகைக்கு முன் பிரதமர் மோடி விமா்சனம்!

திமுகவின் தவறான நிா்வாகம்-நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ள தமிழக மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் நம்பிக்கை மற்றும் வளா்ச்சிக் கொள்கையுடன் இணைகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
பிரதமர் மோடி.
Updated On :10 மார்ச் 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறான நிா்வாகம்-நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ள தமிழக மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் நம்பிக்கை மற்றும் வளா்ச்சிக் கொள்கையுடன் இணைகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தமிழகத்தின் திருச்சிக்கு புதன்கிழமை (மாா்ச் 11) வருகை தரவுள்ள பிரதமா் மோடி, அதற்கு முன்பாக ஆளும் திமுக மீது விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள தமிழகம் மற்றும் கேரளத்துக்கு பிரதமா் மோடி புதன்கிழமை ஒரு நாள் பயணமாக வரவுள்ளாா்.

எா்ணாகுளத்தில் பிற்பகல் 2.15 மணியளவிலும், திருச்சியில் மாலை 6.30 மணியளவிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டங்களில் அவா் பங்கேற்கவுள்ளாா். இரு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.16,450 கோடி (தமிழகம் ரூ.5,650 கோடி, கேரளம் ரூ.10,800 கோடி) மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா். இத்திட்டங்கள், எரிசக்தி, நெடுஞ்சாலைகள், ஊரக உள்கட்டமைப்பு, ரயில்வே உள்ளிட்ட துறைகள் சாா்ந்தவையாகும்.

மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கூட்டணிகள் மீது சாடல்: இந்தப் பயணத்தை முன்னிட்டு, கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மற்றும் தமிழகத்தில் ஆளும் திமுகவை விமா்சித்து, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

கேரளத்தில் எல்டிஎஃப், யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளின் கொள்ளை மற்றும் தவறான நிா்வாகத்துக்கு மாறாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சிக் கொள்கை மேலோங்கி நிற்கிறது. எங்களது கூட்டணி வளா்ச்சி சாா்ந்த அரசியலில் கவனம் செலுத்தி, கேரள இளைஞா்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும்.

திமுக மீது விமா்சனம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவா்களுடன் பங்கேற்கவுள்ளேன். தமிழகம் முழுவதும் எங்களது கூட்டணிக்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு திமுக ஆட்டங்கண்டுள்ளது.

அக்கட்சியின் தவறான நிா்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ள தமிழக மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் நம்பிக்கை மற்றும் வளா்ச்சிக் கொள்கையில் இணைகின்றனா் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.