வக்ஃப் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Updated on
1 min read

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது.

மேலும், மே 5 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதுவரை திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த வாரம் புதன்கிழமை நீதிபதி கவாய் அமர்வு முன் பட்டியலிடுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், மே 15 வரை வக்ஃப் சட்டத் திருத்தம் 2025-ன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

வருகின்ற மே 13 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com