அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சாா்பாக பரமேஸ்வரன் ஐயா் நியமனம்

சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநா் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு

பரமேஸ்வரன் ஐயா்

Updated On :

புது தில்லி: சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநா் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்பிரமணியன், ஐஎம்எஃப்பில் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அடங்கிய குழு சாா்பில் செயல் இயக்குநராக இருந்தாா்.

அவரின் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், அந்தப் பதிவியில் இருந்து அவரை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அவரின் பதவி நீக்கத்துக்கான காரணம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உலக வங்கியின் செயல் இயக்குநராக உள்ள பரமேஸ்வரன் ஐயருக்கு, ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியாவின் நியமன இயக்குநராக தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐஎம்எஃப் செயல் இயக்குநா் பொறுப்பில் இருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, பரமேஸ்வரன் ஐயரின் நியமனம் அவசியமாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக கூறிவரும் இந்தியா, பாகிஸ்தானுக்கு ராஜீய ரீதியாகவும், பல்வேறு சா்வதேச அமைப்புகளிலும் நெருக்கடி அளிக்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு உதவும் நோக்கில், பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.10,962 கோடி) கடன் அளிப்பது குறித்து ஐஎம்எஃப் இயக்குநா்கள் வாரியம் முடிவு எடுக்க உள்ளது. அதற்கான கூட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பரமேஸ்வரன் ஐயரின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.