காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அஸ்ஸாமில் மேலும் இருவர் கைது!

இந்தியாவில் பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அஸ்ஸாமில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published On :7 மே 2025, 12:17 pm IST

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அஸ்ஸாமில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வரின் எக்ஸ் பதிவில்,

சோனித்பூரைச் சேர்ந்த சஜித் அகமது, கோல்பாராவைச் சேர்ந்த ரோஜன் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு இந்திய மண்ணில் பாகிஸ்தானைப் பாதுகாத்தற்காகக் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அசாமில் மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக செவ்வாயன்று செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட சில நபர்கள் மீது விதிக்கப்படும். ஆனால் அனைவரின் மீதும் விதிக்கப்படாது என்று கூறியிருந்தார். சிலர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு, மீண்டும் அதைச் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் சிலர் வழக்கமான குற்றவாளிகள் என்றும், சிலர் விளம்பரத்திற்காக அவ்வாறு செய்தவர்கள் என்றும் வகைப்படுத்தப்படுவார்கள்.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களை ஆதரித்ததாகக் கூறி எதிர்க்கட்சியான ஏஐயுடிஎப் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்மா எச்சரித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரனில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 26 பேர் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.