ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்தில் மே 15 வரை பட்டாசுகள், ட்ரோன்களுக்குத் தடை

குஜராத்தில் மே 15 வரை அனைத்து நிகழ்வுகளிலும் பட்டாசுகள், ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

News image
(கோப்புப்படம்)
Updated On :9 மே 2025, 12:47 pm

DIN

குஜராத்தில் மே 15 வரை அனைத்து நிகழ்வுகளிலும் பட்டாசுகள், ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த மாதம் 15 ஆம் தேதி வரை எந்த விழாக்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்கவோ அல்லது ட்ரோன்களை பறக்கவிடவோ அனுமதிக்கப்படாது.

தயவுசெய்து ஒத்துழைத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த புதன்கிழமை நள்ளிரவில் முயற்சித்ததாகவும், அவை அனைத்தையும் முறியடித்துவிட்டதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

குஜராத்தில் கட்ச் மாவட்டத் தலைநகா் புஜ் நகரையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது.

இதனிடையே கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கவாடா கிராமத்தில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் (ட்ரோன்) உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன.

இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.