மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

போர்ப் பதற்றம் காரணமாக தில்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்..

News image
Updated On :10 மே 2025, 10:35 am

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 32 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மே 10 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவித்த நிலையில், மக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தற்போது மே 15 வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகளை ரத்து செய்துள்ளது. அதன்படி, தில்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், தில்லிக்கு வரவிருந்த 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தில்லியின் விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.