
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் ஏற்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக வெளியாகும் சமூகவலைதளப் பதிவுகள் திடீரென கவனம் பெற்றிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் சில சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியானதை தொடக்கப் புள்ளியாக வைத்து தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான் போர்.
இந்தப் போர் குறித்து பிரபல ஜோதிடரான பிரசாந்த் கினி என்பவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முன்கணிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பலர் மறந்திருக்கலாம் அல்லது கடந்து சென்றிருக்கலாம்.. ஏன்? பலர் கிண்டல்கூட அடித்திருக்கலாம். ஆனால், இப்போது அவர் கணித்த அனைத்துக் கணிப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
அவர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆம் தேதி வெளியிட்டிருந்தப் பதிவில், “இந்தப் போர் கிட்டத்தட்ட ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் இருக்கும். இது முன்பு நடைபெற்ற கார்கில் போரைப் போன்றே மிகத் தீவிரமாக இருக்கும்.
துருக்கி தங்களது ட்ரோன்களையும், சீனா தங்களது ஜே20 விமானங்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது பற்றி சோதனை செய்வார்கள். இந்தியாவுக்கு ரஷியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தாலும் அது பயனளிக்காது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி, இன்னொரு தகவலையும் வெளியிட்டு அவரைப் பின்தொடர்வோரை பதற்றமடைய வைத்திருக்கிறார்.
அதாவது, அதே ஆகஸ்ட்டில் வெளியிட்ட மற்றொரு பதிவில், 2025 ஏப்ரல், மே மனித இனத்துக்கு மிகவும் மோசமான மாதங்களாக இருக்கும். ரஷியா - உக்ரைன் போர், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம், அணு அயுத தாக்குதல் அதிகரிக்கும், புதிய நோய்த்தொற்று உருவாக்கும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆகியவற்றையும் கணித்திருக்கிறார்.
ஜோதிடர் பிரசாத் கினி இது போன்ற வருங்கால நிகழ்வுகளைக் கணிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னதாக வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா, 2024 ஆம் ஆண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவரை படுகொலை செய்யும் முயற்சிகள் நிகழலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோலவே வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டு ஷேக் ஹசீனா நாட்டைவிட்டை தப்பியோடினார். இதுபோன்று பலவற்றைக் கணித்திருக்கிறார் இந்த ஜோதிடர்.
முடிவுதான் என்ன?
இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது தனது பழைய பதிவுகளை ரீட்வீட் செய்துவிட்டு மீண்டும் ஆக்டிவேட் ஆன இந்த ஜோதிடர், இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார் என கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்கா வெற்றிபெறும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவர் கணித்தது போலவே பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைதூக்கி இருக்கிறது. சீனா தயாரிப்பு விமானங்களும், துருக்கி ட்ரோன்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா மீது தாக்குதல் நடத்தின. மேலும், தற்போது இந்தப் போர் 29 நாள்கள் நடக்கும் என கணித்திருக்கிறார். அவர் கணித்ததுபோல் போர் நிறுத்தப்படுமா? அல்லது போர் தொடர்ந்து நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.