பாகிஸ்தான் ராணுவத்தினர்..
பாகிஸ்தான் ராணுவத்தினர்..படம் | ஏபி

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என தாக்குதலுக்கு பெயரிட்ட பாகிஸ்தான்! அர்த்தம் தெரியுமா?

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என தாக்குதலுக்கு பாகிஸ்தான் பெயரிட்டுள்ளதைப் பற்றி...
Published on

இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் மே 8, 9 ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்கியதில் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ்

இந்த நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் (Operation Bunyan al-Marsoos) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஒலிபரப்பு நிறுவனமான ‘ரேடியோ பாகிஸ்தான்’ தெரிவித்திருக்கிறது.

இந்தப் பெயரானது இஸ்லாமியர்களில் புனித நூலான குரானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு “கடினமான உலோகத்தால் செய்யப்பட்ட கேடயம் போன்ற சுவர் அல்லது கட்டமைப்பு” எனப் பொருள். மேலும், அல்லாஹ் தனது பாதையில் அணிவகுத்து போர் செல்பவர்களை உண்மையாக நேசிக்கிறான், அவர்கள் ஒரு வலுவான கட்டமைப்பைப் போல திடமான உறுதி கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரம் வெளியானது: தகவல்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com