பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
வியோமிகா சிங்
வியோமிகா சிங்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் அளித்த விளக்கத்தில், கடந்த சில நாட்களாக நடந்த தாக்குதல்களில் இந்தியா எந்தவொரு வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வந்த முகாம்களை மட்டுமே இலக்காகக் வைத்து தாக்கினோம்.

இந்தியாவின் இந்த தாக்குதல்களால் பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் 3 விமானப்படை தளங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர்.

இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இந்த ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.

ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்துள்ளது.

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பது குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாரும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 3 நாள்களாக எல்லையில் நிலவி வந்த பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com