
கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலியானார்கள்.
கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் மணிகண்டன் ( 27 ). கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சகாதேவன் மகன் முத்துவேல் (24).
இருவரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் நண்பர்களை பார்க்கச் சென்றனர். வாகனத்தை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். முத்துவேல் பின்புறம் அமர்ந்திருந்தார்.
பின்னர் ஊருக்கு திரும்போது கும்பகோணம் அருகே கொட்டையூர் புறவழிச்சாலையில் வேகமாக சென்றனர்.
திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் கிடைத்ததும் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் இருவரது சடலத்தையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.