ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சண்டை நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடக்கம்

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடங்கியது.

News image
இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை
Updated On :12 மே 2025, 6:55 am

DIN

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்குவதை முன்னிட்டு, இன்று காலை நாட்டின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமை தளபதி அனில் சௌகான் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.

பிறகு, தேசிய ஆலோசகர் அஜித் தோவலுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இந்தியா சார்பில் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் ராய், பாகிஸ்தான் டிஜிஎம்ஓ காஷிஃப் அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்

இந்த பேச்சுவார்த்தையில், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.