இயல்புநிலைக்குத் திரும்பும் காஷ்மீர்: செய்திகள் நேரலை

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இயல்புநிலைக்குத் திரும்பும் காஷ்மீர்: செய்திகள் நேரலை

சண்டை நிறுத்தம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமைதி திரும்பியது

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பியது.

இஸ்ரோ தலைவர்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பெயரை இந்தியா வெளியிட்டது.

படிக்க.. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்! பெயர்களை வெளியிட்ட இந்தியா!!

ராஜீவ் கயி விளக்கம்

பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி தெரிவித்துள்ளார்.

படிக்க.. பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட பாதுகாப்பு அமைப்பு: ராஜீவ் கயி

எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அலைகள் போல பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்களும் ஆளில்லா சிறு போர் விமானங்களும் இந்திய எல்லையை நோக்கி வந்தன. அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படையால் முறியடிக்கப்பட்டதாக விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.

படிக்க.. எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம்

தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது, எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்று கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைரஸ் அட்மிரல் பிரமோத் தெரிவித்துள்ளார்.

படிக்க.. எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம்: வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்

இந்தியா - பாக். ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நிறைவு

இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் இன்று பகல் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. மேலும் அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அணு ஆயுதப் போரை நிறுத்திவிட்டோம் : அமெரிக்கா 

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படாமல் நிறுத்திவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

🔴 இன்றிரவு உரையாற்றுகிறார் மோடி!

நாட்டு மக்களிடம் இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

படிக்க.. நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை!

பாகிஸ்தான் ராணுவத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதையும் அதனை ஊக்குவிப்பதையும் உலகுக்கு வெளிக்காட்ட இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை - பிரதமர் மோடி

பாகிஸ்தான் ராணுவம் அப்பாவி மக்கள் மீதும், குருத்வாராக்கள் மீதும் குறித்துவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் ஏவுகணைகளை தூள் தூளாக்கியது - பிரதமர் மோடி

பயங்கரவாதிகள் மீதான தாக்குதலையும் பாகிஸ்தானிலுள்ள ராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் - பிரதமர் மோடி

பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது - பிரதமர் மோடி

இந்திய ராணுவத்துக்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் தலைவணங்குகிறேன்! - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் முதல்முறையாக உரையாற்றி வருகிறார்.

30 நிமிடங்கள் நீடித்த பிரதமரின் உரை:

சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே! - பிரதமர் மோடி 

இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல், பாகிஸ்தான் போரை நிறுத்த கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தற்காலிகமான போர் நிறுத்தம்தான். நமது இந்திய ராணுவப் படை அவர்களை தொடர்ந்து உற்றுக் கவனித்து வருகிறது - பிரதமர் மோடி

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது: சிந்து நதி நீர் குறித்து மோடி! 

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என்று சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப் 

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று(மே 12) மாலை பேசியிருக்கிறார்.

எல்லையில் படை குறைப்பு: இந்தியா - பாக். ராணுவம் இடையே உடன்பாடு! 

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com