விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: 93.66% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2025, 8:26 am

DIN

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

அதன்படி, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி மார்ச்சி 18ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 1.30 மணியளவில் வெளியாகியுள்ளது.

சென்னை மண்டலத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய 98.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோன்று திருவனந்தபுரத்தில் 99.79 சதவீத மாணாக்கர்களும், விஜயவாடாவில் 99.79 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.