நட்டா அறிவுறுத்தல்: டிரம்ப் பற்றிய எக்ஸ் பதிவை நீக்கிய கங்கனா ரணாவத்!

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தல்படி டிரம்ப் பற்றிய எக்ஸ் பதிவை நீக்கியிருக்கிறார் கங்கனா ரணாவத்.
கங்கனா ரணாவத் - கோப்புப்படம்
கங்கனா ரணாவத் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவை, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுறுத்தலின்படி நீக்கியிருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனமானது, அதன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்கக் கூடாது என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

திரைப்பட நடிகையாக இருந்து, பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான கங்கனா ரனாவத், அது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டு விமர்சித்து இருந்தார்.

கங்கனா நீக்கிய பதிவு
கங்கனா நீக்கிய பதிவு

அதில், இந்த அன்பை இழந்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது?

1) இவர் அமெரிக்காவின் அதிபர்தான். ஆனால், இந்தியப் பிரதமரோ, உலக நாடுகள் அதிகம் விரும்பும் ஒரு தலைவர்.

2) டிரம்ப் அமெரிக்காவில் இரண்டாவது முறை அதிபராகியிருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது மூன்றாவது முறை.

3) சந்தேகமேயில்லை, டிரம்ப் ஆல்பா ஆண்தான், ஆனால், எங்கள் பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் மேலானவர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது தனிப்பட்ட பொறாமையா அல்லது உலகளவில் பாதுகாப்பின்மையா? என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை கங்கனா ரனாவத் டெலீட் செய்திருந்தார்

தற்போது இந்த எக்ஸ் பதிவை நீக்கியிருக்கும் கங்கனா ரனாவத், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம், டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியது தொடர்பாக நான் பதிவு செய்த டிவீட்டை நீக்குமாறு மதிப்புக்குரிய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, என்னைத் தொடர்பு கொண்டு கூறியிருந்தார் என்று மற்றொரு பதிவை போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்டக் கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், அந்தப் பதிவை உடனடியாக சமூக வலைதளப் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டேன் என்று புதிய எக்ஸ் பதிவை போட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com