
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் விரைவில் வெளியாகவிருந்த நிலையில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்தியப் பிரதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் சுமார் 21 லட்சம் பேர் காத்துக்கொண்டிருக்கும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதால், தன்னால் சரியாக தேர்வை எழுத முடியாமல் போனதாக, மாணவி ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, மாணவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பல தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சில தேர்வு மையங்களில் மெழுகுவர்த்தி வைத்து மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு அடுத்த விசாரணைக்கு ஜூன் 30ம் தேதிதான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், நீட் தேர்வு திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.