
புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ``டைமண்ட் லீக் போட்டியில் 90 மீ தூரத்தை, தனது சிறந்த ஏவுதலால் கடந்த வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள்.
இது அவரது அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் பரிசாகக் கிடைத்ததே. அவரால் உற்சாகமாகவும் பெருமிதமாகவும் உள்ளது’’ என்று பாராட்டியுள்ளார்.
இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா, கத்தார் நாட்டின் தோகாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்ற போட்டியில், 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா. இதனையடுத்து, அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.