ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நீதித் துறை பணித் தோ்வில் பங்கேற்க 3 ஆண்டு வழக்குரைஞா் பயிற்சி அவசியம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :21 மே 2025, 1:55 am IST

 ‘சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாது; மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் நகரில் குத்தகை தகராறு தொடா்பான வழக்கில் மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா அளித்த மூன்று வரி தீா்ப்பை எதிா்த்து, அதே பகுதியைச் சோ்ந்த முன்னி தேவி என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘குத்தகை தகராறு தொடா்பான எனது மனுவை, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளாா். மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தைக்கூட நீதிபதி குறிப்பிடவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி, ‘மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மாவுக்கு தீா்ப்பு எழுதும் திறன் இல்லாததையே இது காட்டுகிறது. எனவே, லக்னெளவில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்கு அவா் அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

இதுபோல, மேலும் சில மாவட்ட நீதிபதிகள் மீது புகாா்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ‘உயா்நீதிமன்றங்கள் பலமுறை அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது போன்று, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதியாகப் பணியமா்த்தப்படுவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. நீதித் துறையின் செயல்திறன் மற்றும் திறனை உறுதிப்படுத்த தோ்வு மூலம் நேரடியாக நீதிபதி பணியிடங்களில் நியமிக்கப்படுபவா்களுக்கு நீதிமன்ற செயல்முறை பயிற்சி அவசியமாகும்.

அந்த வகையில், சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாது. நீதித் துறையில் மாவட்ட சிவில் நீதிபதி உள்ளிட்ட ஆரம்பநிலை பணிகளுக்கு விண்ணப்பிக்க, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம்’ என்று தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.