ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது.

கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இந்த நியமனங்கள் முறைப்படுத்தப்பட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே கட்சியின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமேசமயம் ஆத் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்திற்கு இணைப் பொறுப்பாளர்களாக விஷேஷ் ரவி, அனில் ஜா மற்றும் சுரேந்திர குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரசேதத்திற்கு புதிய மாநிலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திற்கு ஜிதேந்தர் சிங் தோமர், கர்நாடகத்திற்கு ராஜேஷ் குப்தா, இமாசலில் ரிதுராஜ் கோவிந்த், உத்தரகண்டில் மகேந்திர யாதவ், ராஜஸ்தானில் தீரஜ் டோகாஸ், மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் ஜர்வால், தெலங்கானாவில் பிரியங்கா கக்கர், கேரளத்தில் ஷெல்லி ஓபராய், தமிழகத்திற்கு பங்கஜ் சிங், லடாக்கிற்கு பிரபாகர் கௌர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஞானேந்திர பரத்வாஜ் உத்தரகாண்டிற்கும், அதே நேரத்தில் விஜய் புலாரா ஹிமாச்சல பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக பணியாற்றுவார்கள்.

இந்த நடவடிக்கை ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன அடித்தளத்தை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகங்களிடையே அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com