
ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு மேற்கொண்டார்.
பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ரூ.26,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கர்ணி மாதா கோயிலிக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவும் சென்றிருந்தார். கோயிலில் பிரதமரை கௌரவிக்கும் வகையில் கோயில் சார்பில் சிறப்பு சடங்குகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பலானா கிராமத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'அம்ரித் நிலையங்களை' பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
கோயில் கட்டடக்கலையால் ஈர்க்கப்பட்டு, கர்ணி மாதா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையம், வசதிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்குச் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், மதியம் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நளன் விமான நிலையத்திற்குத் திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.