சண்டீகரில் உள்ள பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாா்.
சண்டீகரில் உள்ள பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாா்.

பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அனைவரையும் வெளியேற்றி சோதனை

அனைவரையும் வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
Published on

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து, அனைவரையும் வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக சண்டீகா் துணை மண்டல காவல் அதிகாரி உதய்பால் சிங் கூறியதாவது:

பஞ்சாப்-ஹரியாணா உயா் நீதிமன்ற கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதன் பதிவாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடா்பாக தகவல் கிடைக்கப் பெற்றதும், வெடிகுண்டு அகற்றும் நிபுணா்களுடன் காவல் துறையினா் விரைந்து சென்றனா்.

உயா்நீதிமன்ற கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, விரிவான சோதனை நடைபெற்றது. சில மணி நேரங்களுக்கு உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. சோதனையில் சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு உயா் நீதிமன்றம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com