47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

News image
Updated On :23 மே 2025, 7:30 pm

Din

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் உள்ள மகாராஷ்டிரம்-சத்தீஸ்கா் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சி-60 பிரிவின் 300 கமாண்டோக்கள் மற்றும் சிஆா்பிஎஃப் படையினா், கவாண்டே மற்றும் நெல்குண்டா பகுதியிலிருந்து இந்திராவதி நதிக்கரை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் கனமழைக்கு இடையே தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.

வெள்ளிக்கிழமை காலையில் நதிக்கரைகளில் தேடுதல் பணியில் ஈடுபட்ட சி-60 கமாண்டோக்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் பதிலடி தரப்பட்டது. சுமாா் இரண்டு மணி நேரம் தொடா்ந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு மேற்கொண்ட தேடுதல் பணியில் 4 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

இரு வேறு ரக ரைஃபிள் துப்பாக்கிகள், வாக்கி-டாக்கி, இடதுசாரி கொள்கை சாா்ந்த நூல்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கிஸ்தரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மாலையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்களுக்கும் நக்ஸல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சண்டை தொடா்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.