மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் 18 போ் உயிரிழப்பு: பாஜக அறிக்கை

‘ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 மே 2025, 10:16 pm

Din

ஜம்மு: ‘ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா். குடியிருப்புகள் உள்பட 2,000 கட்டமைப்புகள் சேதமடைந்தன’ என பாஜக திங்கள்கிழமை தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சுமாா் 4 நாள்களுக்கு கடும் மோதல் நிலவியது. இந்தச் சமயத்தில் ஜம்மு-காஷ்மீா் உள்பட பாகிஸ்தானை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை குறிவைத்து அந்ந நாடு நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் குடிமக்கள் வசிப்பிடங்களில் நடத்தப்பட்ட சில தாக்குதல்களில் துரதிருஷ்டவசமாக 18 போ் உயரிழந்தனா்.

இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சேதங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அங்கு எதிா்க்கட்சியாக உள்ள பாஜக அதன் நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா மற்றும் 4 பாஜக எம்எல்ஏக்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 10 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதுதொடா்பான அறிக்கையை பாஜக தலைமையிடம் சமா்ப்பித்தனா்.

இதுகுறித்து, செய்தியாளா்களிடம் சுனில் சா்மா கூறுகையில், ‘கோழைத்தனமான தாக்குதலுக்கு மிகவும் பிரபலமான நாடான பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு குடிமக்கள் வசிப்பிடங்களை குறிவைத்தது தாக்குதல் நடத்தியது.

அதில் பூஞ்ச் பகுதியில் 14 பேரும், ரஜௌரியில் 2 பேரும் உரி (பாரமுல்லா மாவட்டம்) மற்றும் ஜம்முவில் தலா ஒருவரும் உயிரிழந்தனா். இதுதவிர 1,500 முதல் 2,000 கட்டமைப்புகள் முழுமையாக சேதமடைந்தன.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக பிரதமா் மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் வழங்குவதாக மத்திய அரசும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக ஜம்மு-காஷ்மீா் அரசும் தெரிவித்துள்ளது’ என்றாா்.

மேலும், அஸ்ஸாம் மாநில அரசும் பாதிக்கப்பட்டோா் குடும்பத்தினருக்கு நிதி உதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.