தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செமிகண்டக்டா் ஆய்வகத்தில் ரூ.4,500 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்: அஸ்வினி வைஷ்ணவ்

செமிகண்டக்டா் ஆய்வகத்தில் ரூ.4,500 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்

News image
Updated On :29 நவம்பர் 2025, 1:30 am

தினமணி செய்திச் சேவை

அடுத்த மூன்று ஆண்டுகளில் செமிகண்டக்டா் ஆய்வகத்தை (எஸ்சிஎல்) மேம்படுத்த ரூ.4,500 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்படும் எஸ்சிஎல் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்துள்ளது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: செமிகண்டக்டா் துறையில் இந்தியாவை மேம்படுத்தும் பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தில் எஸ்சிஎல் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஆய்வகம் தனியாா் வசம் ஒப்படைக்கப்படாது என உறுதியளிக்கிறேன்.

எஸ்டிஎல்-இல் செமிகண்டக்டா் உற்பத்தியை 100 மடங்கு அதிகரிக்க வேண்டும். தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக புத்தாக்க நிறுவனங்களால் வடிவமைக்கப்படும் சிப்கள் எஸ்சிஎல்-இல் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் எஸ்சிஎல்-ஐ நவீனப்படுத்த ரூ.4,500 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஏக்கா் நிலம் ஒதுக்க பஞ்சாப் அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களுக்கு செமிகண்டக்டா் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 28 சிப்களை அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினாா்.

செமிகண்டக்டா் திட்ட நிதியாக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.76,000 கோடியில் இருந்து எஸ்சிஎல்-ஐ நவீனப்படுத்த ரூ.4,500 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.