அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக். 16 - 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட வாராந்திர வானிலை கணிப்பின் அடிப்படையில்,
தென்மேற்கு பருவ மழை, வரும் (அக்டோபர்) 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.
அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு / வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை 16-18 அக்டோபர் 2025 துவங்குவதற்கான சாத்தியமுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை
Northeast monsoon to begin on Oct. 16-18: India Meteorological Department
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.