பிகார் தேர்தல்: சாத் பண்டிகைக்குப் பிறகு பிரசாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

சாத் பண்டிகைக்குப் பிறகு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
வாக்குரிமைப் பேரணியின்போது பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி உடன் ராகுல் காந்தி
வாக்குரிமைப் பேரணியின்போது பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி உடன் ராகுல் காந்திபிடிஐ
Updated on
1 min read

சாத் பண்டிகைக்குப் பிறகு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். சாத் பண்டிகைக்கு மறுநாளாக அக்டோபர் 29 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் பிரசாரம் தொடங்கி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்,

''சாத் பண்டிகைக்குப் பிறகு எங்கள் பிரசாரம் தொடங்கவுள்ளது. அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரத்தில் பங்கேற்கவுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் பல்வேறு முரண்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவை குறித்து ஆளும் கூட்டணித் தலைவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரசார யுக்திகளை வகுப்பதில் கட்சியினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தொகுதிப் பங்கீட்டில் திருப்தி அடையாத வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் பேசும்போது, கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால், அனைவருக்குமே வாய்ப்பு கிடைப்பதில்லை.

வாய்ப்பு கிடைக்காதவர்கள், தங்கள் குறைகளை தேர்தல் முடியும் வரை பொருத்துக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டிலேயே ஒற்றுமை இல்லை என்பதை பாஜக அரசு கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பாஜகவின் மனிதாபிமானமற்ற முகம்: பெண் மருத்துவர் தற்கொலை விவகாரத்தில் ராகுல் கருத்து

Summary

Bihar polls: Congress to launch campaign after Chhath Puja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com