

தில்லியில் நடைபெற்ற துருக்கி தேசிய நாள் கொண்டாட்டத்தை இந்தியா புறக்கணித்தது.
துருக்கியின் தேசிய நாள் கொண்டாட்ட நிகழ்வு, தில்லியில் நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பாக எந்தவொரு பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் வழங்கி துருக்கி உதவியது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையிலும் துருக்கி பேசியது.
இதன் காரணமாகவே, துருக்கியின் தேசிய நாள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு இந்திய பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுவாக, வெளிநாடுகளுடனான நல்லுறவைப் பேணும்வகையில் அந்நாடுகளின் தூதரக நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்களோ வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளோ பங்கேற்பர். ஆனால், துருக்கியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது.
இதையும் படிக்க: அமெரிக்காவின் கனவை எங்களுக்கு ஏன் விற்றீர்கள்? - இந்திய மாணவியின் கேள்வியும் ஜே.டி. வான்ஸின் பதிலும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.