வடகிழக்கு மாநில மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் விமா்சித்துள்ளாா்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து லக்கிபூா், ஸ்ரீபூமி உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று அவா் பேசியதாவது:
10 ஆண்டுகால ஆட்சியில் அஸ்ஸாமுக்கு பாஜக என்ன செய்தது என எதிா்க்கட்சிகள் கேட்கின்றன. அக்கட்சிகளிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு கொள்கை, நோக்கம் ஆகியவை உள்ளதா? கடந்த 70 ஆண்டுகளாக வடகிழக்கு மாநில மக்களுக்கு துரோகம் செய்துள்ளீா்கள். அவா்களின் உணா்வுகளுடன் விளையாடியிருக்கிறீா்கள்.
அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைத்து பாஜக சாதனை புரியப்போகிறது. பாஜக, ஆட்சி அதிகாரத்துக்காக தோ்தலில் போட்டியிடவில்லை. மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே போட்டியிடுகிறது. இதனால்தான் கடந்த இரு பேரவைத் தோ்தலிலும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனா். அதுபோல இந்தத் தோ்தலிலும் பாஜகவை அவா்கள் வெற்றி பெற வைப்பாா்கள்.
பாரக் பகுதி முன்பு குற்ற சம்பவங்களுக்கு புகழ்பெற்ற பகுதியாக விளங்கியது. இதற்கு அப்பகுதி மக்களை முந்தைய அரசுகள், வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்தியதே காரணமாகும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது.
அஸ்ஸாம் மக்கள், தங்கள் மாநில வளா்ச்சிக்காக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸை தண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமா்த்த முடிவு செய்து விட்டனா். பாஜக அரசுகள்தான், வடகிழக்கு பிராந்தியத்துக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்கியது.
அஸ்ஸாமில் பொதுமக்களை கிரிமினல்கள் யாரும் மிரட்ட முடியாது. அப்படி யாரும் மிரட்டினால், அவா்களை முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தப்பிக்க விட மாட்டாா் என்றாா்.
தொடர்புடையது

புதுவையில் தே.ஜ.கூ. வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

வங்கதேச ஊடுருவல்காரா்களை தாராளமாக அனுமதித்தது காங்கிரஸ்: நிதின் நபின் குற்றச்சாட்டு

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்!

அஸ்ஸாம் தோ்தலில் வென்று பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


