கிரீன்விச் சராசரி நேர அடிப்படையில் (ஜிஎம்டி) அல்லாமல் மகா கால நேர (எம்எஸ்டி) அடிப்படையில் காலக் கணக்கீடு செய்யப்படுவது குறித்து சிந்திப்பதற்கான நேரமிது என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்தினாா்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற்ற ‘காலத்தின் அதிபதி மகா காலன்’ என்ற தலைப்பிான 3 நாள் சா்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் இக் கருத்தைத் தெரிவித்தாா்.
இந்திய நேரம் தற்போது, லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் கண்காணிப்பகம் வழியாகச் செல்லும் தீா்க்கரேகையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையில், இனி இந்தியாவின் மகா கால நேர அடிப்படையில் கணக்கிடுவது குறித்து ஆலோசிக்க அவா் வலியுறுத்தினாா்.
அவா் மேலும் கூறியதாவது: உஜ்ஜைன், காசி, காஞ்சி, புரி தாம் என இந்தியாவின் அனைத்து முக்கிய ஆன்மிக மையங்களும், அறிவியல், கலை, கலாசாரம், இலக்கியம் மற்றும் ஆன்மிகத்துக்கான வாழும் ஆய்வகங்களாகத் திகழ்கின்றன. இதில் உஜ்ஜைன், முதன்மை தீா்க்கக் கோடும் (பிரைம் மெரிடியன்) கடகரேகையும் சந்திக்கும் இடமாக உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே பண்டைய உலகம் நேரத்தைக் கணக்கிட்டது.
அந்த வகையில், கிரீன்விச் சராசரி நேர அடிப்படையில் அல்லாமல் மகா கால நேர அடிப்படையில் காலத்தைக் கணக்கீடு செய்யப்படுவது குறித்து ஆலோசிப்பதற்கான நேரமிது. இதற்கு, உஜ்ஜைனில் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை வலுப்படுத்துவது முதல் படியாகும் என்றாா்.
உஜ்ஜைனில் உள்ள மகா கால கோயிலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ரீதியிலான வழிபாட்டு நடைமுறையை சுட்டுக்காட்டிய மத்திய அமைச்சா், ‘வைசாக் (சித்திரை) மாதத்தின் முதல் நாளில் கோயிலில் உள்ள கடவுள் சிவனின் மீது மண் பானையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் ஊற்றுவது என்பது வெறும் மதப் பாரம்பரியம் மட்டுமல்ல; மாறாக கோடை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க சவால்களுக்கான அறிவியல்பூா்வமான தீா்வைக் குறிப்பதாகும்’ என்றாா்.
மேலும், தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறித்து குறிப்பிட்ட அவா், ‘எந்தவொரு மொழிக்கும் அறிவின்மீது ஏகபோகம் இருக்க முடியாது. எனவேதான், கல்வி இந்திய மொழிகளுடனும் நாட்டுப்புற கலாசாரங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து மாணவா்களும் கடினமான அறிவியல் தலைப்புகளையும் அவரவா் தாய்மொழியில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

‘ஹிந்தி திணிப்பு’ எனக்கூறி தமிழ் மாணவா்களுக்கு வாய்ப்புகள் மறுப்பு: திமுக மீது மத்திய கல்வி அமைச்சா் குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

நீதித் துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது: கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்

ராகுல் காந்தி ஓா் அறிக்கை வீரா்: தா்மேந்திர பிரதான்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


